Sunday, June 19, 2016

ஆயத்துல் குர்ஸியின் சிறப்புக்கள்

ஆயத்துல் குர்ஸியின் சிறப்பு...

அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:

நபி(ஸல்) அவர்கள் ரமளானுடைய (ஃபித்ரா) ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள். அப்போது ஒருவர் வந்து உணவுப் பொருட்களை அள்ளலானார். அவரை நான் பிடித்து, 'உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்!' என்று கூறினேன். அதற்கவர், 'நான் ஓர் ஏழை!' எனக்குக் குடும்பம் இருக்கிறது. கடும் தேவையும் இருக்கிறது! என்று கூறினார். அவரை நான்விட்டு விட்டேன். விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள், 'அபூ ஹுரைராவே! நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவர் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! தாம் கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தமக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவர் முறையிட்டார். எனவே, இரக்கப்பட்டு அவரைவிட்டு விட்டேன்! என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான்! மீண்டும் அவன் வருவான்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நம்பி அவனுக்காக (அவனைப் பிடிப்பதற்காக) காத்திருந்தேன். அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கியபோது அவனைப் பிடித்தேன். 'உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்! என்று கூறினேன். அதற்கவன், 'என்னைவிட்டுவிடு! நான் ஓர் ஏழை! எனக்குக் குடும்பமிருக்கிறது! இனிநான் வரமாட்டேன்! என்றான். அவன் மேல் இரக்கப்பட்டு அவனைவிட்டு விட்டேன். விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள் அபூ ஹுரைராவே! உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்! என்று கேட்டார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே! அவன் (தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான்; எனவே, அவன் மேல் இரக்கப்பட்டு அவனைவிட்டுவிட்டேன்! என்றேன். 'நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான். திரும்பவும் உம்மிடம் வருவான்! என்றார்கள். மூன்றாம் முறை அவனுக்காகக் காத்திருந்தபோது, அவன் வந்து உணவு பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து, 'உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்! (ஒவ்வொரு முறையும்) 'இனிமேல் வரமாட்டேன்! என்று செல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய்! என்று கூறினேன். அதற்கவன் 'என்னைவிட்டுவிடு! அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்!' என்றான். அதற்கு நான் 'அந்த வார்த்தைகள் என்ன? என்று கேட்டேன். 'நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஓதும்! அவ்வாறு செய்தால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்!' என்றான். விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள் 'நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனைவிட்டு விட்டேன்!' என்றேன். 'அந்த வார்த்தைகள் என்ன? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதும்! அவ்வாறு ஓதினால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்! என்று என்னிடம் அவன் கூறினான்' எனத் தெரிவித்தேன். நபித்தோழர்கள் நன்மையான(தைக் கற்றுக் கொண்டு செயல் படுத்துவதில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் 'அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும் அவன் உம்மிடம் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறான்! மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா? என்று கேட்டனர். 'தெரியாது" என்றேன். 'அவன்தான் ஷைத்தான்!' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

Saturday, June 18, 2016

LOVE POEMS (part-02)

Ninaippathu
Pol
Valkkai
Ellarukkum
Amaivathu
Illai...

Alakaha
Vala
Thodankiya
Valkaiyai
Silarukku
Vala
Therivathum
illai...

______________________________________

Unnai
Theadi
Naan
Varalam
Ennai
Theadi
Nee
Varalaam...

But

Iruvaraiyum
Theadi
Pirivu
Varakkoodaathu!!!

______________________________________

"Soagangal kanneeril mattum marainthirukkathu.. waai wittu sirikkum silarin poi sirippugalilum marainthirukum...

-----
Â
-----"
______________________________________

neruppil erinthalum,
thangathin
niram marathu..
athu pola nee arugil irunthalum tholaivil irunthalum enrum en kathal marathu

::UnNinaivu::
______________________________________

Yanakkagave peranthaval nee,
unnai nesippatharkagavea padaikkapattavan naan,
en ethirparppu nee alla,
unn anbu mattum than........

=>

அல்-குர்ஆனின் சிறப்புக்கள்

குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்
===========================
1) நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ”பரிந்துரை” செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

2) குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு சூராக்கள் அல்பகரா, ஆலு இம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

3) உங்களில் சிறந்தவர், குர்ஆனைக் கற்று அதை பிறருக்கு கற்றுக் கொடுத்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

4) குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன் படி செயல்பட்டவர் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

5) அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து (குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ, அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால், அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூற மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

6) ”எவருடைய உள்ளத்தில், குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ, அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப்போல்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

விளக்கம்: படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான், குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளினான். ஆனால், முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். உங்களை மரணம் வந்தடைவதற்கு முன், தெரிந்தவர்களிடம் சென்று, குர்ஆனை கற்றுக் கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதர சகோதரிகள், குர்ஆனை சரளமாக ஓதவும், அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று கூறிக்கொண்டு, நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி, எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். முஸ்லிம்களே! தயவு செய்து குர்ஆனைப் படியுங்கள், அதைப்படிப்பது மிகவும் அவசியமானது. அதைப்படிப்பது மிகவும் இலகுவானது. அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.

திட்டமாக, நாம் குர்ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம். ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா? (அல்குர்ஆன் 54:22)

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)
நாம் இந்தக் குர்ஆனைப் படித்து, விளங்கி, அதன்படி செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். அப்படிச் செயல்படாதவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? என்று கேட்கின்றான். அப்படி அவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்படவில்லையே! ஏன் அதைப்படித்து செயல்படாமல் இருக்கின்றார்கள்? என அல்லாஹ் நமது சிந்தனையைத் தூண்டும் கேள்வியை கேட்கின்றான். ஆகவே, அன்புள்ள சகோதர சகோதரிகளே! குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள். அதன் கருத்துக்களை தர்ஜமதுல் குர்ஆனின் மூலம் விளங்கிப்படியுங்கள். அதன் படி செயல்படுங்கள். விஷேசமாக குர்ஆன் இறங்கிய இந்த ரமளான் மாதத்தில் அதிகமாக ஓதுங்கள். ஒரு எழுத்தை ஓதினால் குறைந்தது பத்து நன்மை கிடைக்கின்றது. ஒரு நாளில் எத்தனையோ எழுத்துக்களை படிக்க நமக்கு வாய்ப்பிருக்கின்றது. சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். குர்ஆனைப் படித்து, அதன்படி நடந்து, ஈருலக வெற்றி பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..!

ýãîÑ

Friday, June 17, 2016

LOVE POEMS (part-01)

Ellorukkum Nallawanaaha Irukka Muyatchikkum Pothu Thaan... Kettawan Enra Peyarai Sampaathikkurom...

______________________________________

En
Kangal
Unnai
Kaanada
Podu
Than
Nan un meedu
Konda
Kadalin
Aalattai
En manam
Unarhiradu

~AA~

______________________________________

Silarin Anbu Oru Kattathirku Mael Nammai Vittu Vilahi Viduvethai Kan Munnae Kaanuhayil Thaan Manasu Romba Valikkuthu..

Ayaaz

______________________________________

Palahum Mun
"Thanimai"
Palahiya Pin
"Inimai"
Pirivu Enpathu
"Kodumai"
Pirinthaalthan
Therium
Paasathin
"Arumai"

<Ayaaz>

______________________________________

Monday, June 13, 2016

நபிகளாரின் பொன் மொழிகள்.(60)

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!! ஸலவாத் எனும் கருணையும், ஸலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீதும் அன்னவர்களின் குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!! 

எது நேர்வழி? எது சத்தியம்? எதை இறைவன் விரும்புகிறான்? எதை வெறுக்கிறான்? இறைஉவப்பைப் பெற நாம் என்ன செய்யவேண்டும்? இம்மை வாழ்வை நடாத்திச் செல்வது எப்படி? மறுமை வெற்றியை ஈட்டுவது எவ்வாறு? இந்தக் கேள்விகளுக்குப் பதில் பெறுவது நடக்கிற காரியமா? அசாத்தியம்: எனவே, நாம் பொய்யில் புரண்டு, அசத்தியத்தில் மூழ்கி, கடும் இயப்பாடுகளில் சிக்கி, இருளிலேயே தட்டுத் தடுமாறி உழன்று கொண்டு இருந்திருப்போம். மனிதர்களாகவே இருந்திருக்க மாட்டோம். 

ஆனால் இறைவன் நம் மீது மாபெரும் அருட்கொடையை பொலிந்து விட்டான். ஆம்! அந்த மாபெரும் அருட்கொடைதான் நமது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஆவார்கள். " மனிதர்களே! இதோ, அகிலங்களுக்கு ஓர் அருட்கொடையாக, நீங்கள் நேர்வழி பெறுவதற்காக என்னுடைய இறுதித் தூதரை நான் அனுப்பிவிட்டேன். இனி உங்களின் இம்மை வெற்றியும் மறுமை ஈடேற்றமும் இந்த இறைத்தூதரைப் பின்பற்றுவதில் தான் அடங்கியுள்ளது!" என்று வல்ல இறைவன் குர்ஆனில் பல்வேறு இடங்களில் தெளிவாக அறிவித்துவிட்டான். 

இறைத்தூதராக நியமிக்கப்பட்ட அந்த நிமிடம் முதல் - அண்ணலாரின் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு செயலும் - அவர்களின் சிறுசிறு அசைவுகளும் கூட மிகக் கவனமாகப் பதிவு செய்யப்பட்டன. காரணம்: திருநபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை திருகுர்ஆனின் செயல்வடிவாகத் திகழ்ந்தது. அதாவது, நடமாடும் குர்ஆனாக அவர்கள் திகழ்ந்தார்கள். வாழ்வின் ஏதோ ஒன்றிரெண்டு துறைகளுக்கு மட்டுமல்ல அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டினார்கள். அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவுகள், தந்த அறிவுரைகள், ஏவிய செயல்கள், தடுத்த காரியங்கள் ஆகிய அனைத்துமே மனிதனுக்கு வழிக்காட்டும் ஒளி விளக்குகளாய் விளங்குகின்றன. 

நபிகள்  நாயகம் ﷺ மொழிந்தவை:

1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன. 
2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான். 
3.அமானிதத்தை (அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை. 
4. உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது அனாதைகளை அரவணைக்கும் வீடேயாகும். 
5. நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் ஷெய்த்தானின் தன்மையாகும். 
6. உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார். 
7. எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும். 
8. எந்த மனிதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அவன் அதை அறியாமைக்கால வழக்கப்படி உயிரோடு புதைக்கவில்லையோ, அதனை இழிவாக கருதவில்லையோ, அதைக்காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு முன் உரிமை வழங்கவில்லையோ அத்தகையவனை இறைவன் சுவனத்தில் புகுத்துவான். 
9. இலஞ்சம் வாங்குபவர் மீதும், இலஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும். 
10. கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள். 
11. பதுக்கல் செய்பவன் பாவியாவான்.
12. தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது. 
13. பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். 
14. தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு 
அளித்திடும் நல்ல கல்வியும், நல்லோக்கப் பயிற்சியும் ஆகும். 
15. அனைத்தையும் விடச் சிறந்த சேமிப்பு பொருள்கள் இறைவனை நினைவு கூரும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வால் நிரம்பிய உள்ளம், இறைவழியில் நடந்திட தன் கணவனுக்கு உதவிடும் இறை நம்பிக்கையுள்ள நல்ல மனைவி ஆகியனவே.
16. நான் உங்களுக்கு மிகச்சிறந்த தர்மம் ஒன்றை கூறட்டுமா? அது, தனக்கு பொருளீட்டி உணவளிக்க வேறு யாருமில்லை என்ற நிலையில் உன் பக்கம் திருப்பி அனுப்பப்பட்ட உன் மகள் தான்.
17. அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள். 
18. ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்.
19. இறைவனின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்.
20. தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது. 
21. பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச்சிறந்த தர்மமாகும்.
22. தன் அடிமைகளின் மீதும் பணியாட்களின் மீதும் தன் அதிகாரத்தை தவறாக பிரயோகித்தவன் சுவனத்தில் நுழைய மாட்டான். 
23. நோயாளிகளை நலம் விசாரியுங்கள்.
24. உங்களில் ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடியாவார். எனவே, ஒருவர் தன் சகோதரன் துன்பத்தில் சிக்கி இருப்பதை கண்டால் அதனை அவர் நீக்கி விடட்டும். 
25. உனது தந்தையின் அன்பை நீ பாத்துக்காத்து கொள். அதை முறித்து விடாதே அவ்வாறு அதை முறித்து கொண்டால் இறைவன் உனது ஒளியை போக்கி விடுவான். 
26. இறைவனின் உதவி என்னும் கை ஒன்றுப்பட்ட மக்களின் மீதிருக்கிறது.
27. உங்களில் இறந்தவர்களின் நற்செயல் பற்றியே கூறுங்கள்.
28. இறைவனை அஞ்சுங்கள். உங்கள் மக்களிடையே நீதமாக நடந்து கொள்ளுங்கள். 
29. பெருமை அடிப்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான். 
30. நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை, உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது. 
31. இறுதி தீர்ப்பு நாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாக இருக்கும்.
32. குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.
33. எவரையும் பழித்து காட்டுவதை நான் விரும்பவில்லை. 
34. புறம் பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும். 
35. கோள் சொல்பவன் சுவனம் நுழைய மாட்டான்.
36. நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடும்.
37. தன் நாவையும், வெட்கத்தலத்தையும் ஒருவர் பாதுகாத்து கொள்வதாக பொறுப்பேற்றால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். 38. நாவை அடக்கு. உன்னால் தீய உணர்வுகளை அடக்க முடியும்.
39. தீமைக்கு பின் அதை அழிக்கவல்ல நன்மையை செய்யுங்கள். 
40. மௌனம் சாதிப்பது அறிவு நிறைந்த செயல்.
41. இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.
42. நாணம் நன்மையை மட்டுமே கொணர்கின்றது.
43. ஒரு வினாடி நேர சிந்தனை, ஓராண்டு கால இறை வணக்கத்தை விடச் சிறந்தது.
44. உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு. உமக்கு அநீதம் இழைத்தவனை மன்னித்து விடும். 
45. நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். தீயகுணம் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.
46. உண்மையான வியாபாரி நபிமார்கள், தியாகிகள், நல்லடியார்கள் முதலியோர்களுடன் சுவனத்தில் இருப்பார்.
47. வணக்க வழிப்பாடு உள்ள ஒரு உலோபியை விட வணக்க வழிப்பாடு குறைந்த ஒரு கொடையாளி இறைவனுக்கு மிக சிறந்தவன். 
48. தர்மத்தில் சிறந்தது இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பது தான். 
49. இரசியமாக செய்யும் தர்மம்தான் இறைவனின் கோபத்தை தடுக்கும். 
50. ஒரு மனிதன் பெற்றோரை ஏசுதல் பெரும் பாவமாகும். 
51. தன் பெற்றோரை நிந்திப்பவன் தன் மக்களால் நிந்திக்கப்படுவான். 
52. கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும். 
53. பிள்ளைகள் பேரில் உபகாரமாயிருக்கும் தாய் தந்தையருக்கு இறைவன் அருள் செய்கிறான். 
54. ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு கொப்பாகும் 
55. வணக்கங்களில் மிக இலகுவானதை நான் உங்களுக்கு தெரிவிப்பதானால் அது மௌனம் காக்கும் நாவும், மங்களமான நற்குணமும்தான்.
56. மிதமிஞ்சிய உணவு அறிவை கெடுத்து, ஆரோக்கியத்தை குறைக்கும்.
57. செல்வவளம் என்பது அதிகமாக செல்வத்தை பெறுவதல்ல. போதுமென்ற மனதை பெறுவதே உண்மையான செல்வமாகும்.
58. இறைவன் யாருக்கு நலவை நாடுகிறானோ அவனுக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பான்.
59. நம் சிறுவர்களிடம் மரியாதை காட்டாதவனும், பெரியோர்களுக்கு மரியாதை செய்யாதவனும் நம்மை சார்ந்தவனல்ல.
60. உன் சகோதரனின் துன்பத்தை கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே. இறைவன் அவன் மீது கருணை புரிந்து உன்னை துன்பத்தில் ஆழ்த்திடுவான்.

யா அல்லாஹ்! உனது தூதர், எங்களின் சிரேஷ்டர், உலக மக்களின் நேர்வழிகாட்டி, எங்கள் ஆத்மாக்களுக்கு புத்துயிர் தந்த ஞானதீபம், அனாதைகளின் இரட்சகர், ஒப்பற்ற தலைவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் இந்த உயர் மணி மொழிகளை எங்கள் வாழ்க்கையில் எடுத்து நடக்க நீ எங்களுக்கு அருள் புரிவாயாக. அவர்களோடு நாளை சுவர்க்கத்தில் இருக்கும் பாக்கியத்தை எனக்கும், என் குடும்பத்துக்கும், என் அன்பான சுன்னத் வல் ஜமாஅத் எனும் சத்திய கொள்கை பாதையில் இருக்கும் நண்பர்களுக்கும் நஸீபாக்குவாயாக!! ஆமீன்!!

MAIL OF ISLAM

Wednesday, June 8, 2016

காதல் மூலம் மனைவியை தெரிவு செய்ய முடியுமா?

காதல் மூலம் ஸாலிஹான துணையை அடைய முடியுமா?

காதல் என்ற வழிமுறை காதல் என்ற வழிமுறை மூலம் ஸாலிஹான துணையை அடைந்து கொள்ள முடியுமா? அல்லது காதல் என்பது மிகச் சரியான அல்லது ஸாலிஹான துணையை அடைந்து கொள்வதற்கு ஷரீஅத் அனுமதித்த ஒரு வழிமுறையா? இல்லையா?

எனது மாணவர்களிடம் நான் அதிகம் எதிர்கொள்ளும் கேள்விகளுள் இதுவும் ஒன்று. இதில் சுவாரஷ்யம் என்னவென்றால், அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கும்போது, “சேர், இதனை நாம் எமக்காகக் கேட்கவில்லை. எங்களிடம் பலர் இதுபற்றிக் கேட்கிறார்கள். அவர்களுக்கு விளக்கம் சொல்வதற்காகவே கேட்கிறோம்” என்பார்கள். பிறருக்காகக் கேட்பதாக இருக்கலாம். தமக்காகவே கேட்பதாக இருக்கலாம். எவ்வாறு இருப்பினும் இன்று இளைஞர் யுவதிகளிடத்தில் இது முக்கியமானதொரு கேள்வி என்பது மாத்திரம் உண்மை. அந்தவகையில் காதல் குறித்த சில வார்த்தைகளைப் பரிமாறிக் கொள்வது இந்தப் பத்தியின் நோக்கம்.

இன்றைய ஊடகங்கள், சினிமாக்கள் போன்றன காதலை மனித நாட்டத்திற்கு அப்பால்பட்ட ஒரு செயலாகவே சித்தரிக்கின்றன. அது அறிவுபூர்வமாக நடைபெறுகின்ற ஒரு விடயமல்ல. காதல் தன்னையறியாமலே தனக்குள் நுழைந்து விடும். அதனைத் தவிர்ந்து கொள்வது சாத்தியமில்லை. யாரும் அதிலிருந்து தப்ப முடியாது என்ற ஒரு பிரமையை ஏற்படுத்தியிருக்கின்றன. அதனைக் குறிக்கும் வகையிலேயே ‘காதலில் விழுதல்’ என்ற பிரயோகத்தைப் பயன்படுத்துகின்றனர். காதல் என்பது நின்று நிதானித்து சிந்தித்து எடுக்கும் முடிவு அல்ல. அது தன்னை மீறி நடைபெறும் ஒரு விடயம் என்பதே இந்த வார்த்தையின் மூலம் நாடப்படுகிறது.

காதல் குறித்த இந்தப் பார்வை மனித இயல்புக்கும் முரணானது, ஷரீஅத்திற்கும் முரணானது. ஆனால் இந்த இடத்தில் இஸ்லாம் ஏற்றுக் கொண்ட ஒரு உண்மை இருக்கின்றது. ஒரு பெண் மீது ஆணுக்கு விருப்பம் ஏற்படுவதும், ஒரு ஆண் மீது பெண்ணுக்கு விருப்பம் ஏற்படுவதும் இயற்கையானது. இதனை இஸ்லாம் மறுக்கவில்லை. இந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே ஆணும் பெண்ணும் இணைந்து வாழ முடியும். ஆனால் அந்த விருப்பம் மனித நாட்டத்திற்கு அப்பால்பட்டு நடைபெறுகின்ற ஒரு விடயமாக இஸ்லாம் கூறவில்லை.

அடுத்து, காதல் பரஸ்பர புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்புகிறது. எனவே, காதலித்து திருமணம் செய்யும் போது அந்தக் குடும்ப வாழ்வு நிலைக்கிறது. எந்தப் பிரச்சினையையும் எந்த சவாலையும் அவர்களது காதல் சமாளித்து விடும். காதல் என்பது இன்பமயம் என்று சிலர் காதலை விளங்கப்படுத்த முற்படுகின்றனர். இந்த எண்ணமும் வெறுமனே ஒரு கற்பனை மாத்திரமே. இங்கு நாம் ஒரு கேள்வியை நியாயமாகக் கேட்டுப் பார்க்க வேண்டும். திருமணத்திற்குப் பின்னர் அவசியமான புரிந்துணர்வை திருமணத்திற்கு முன்னர் செய்யும் காதல் உண்மையில் வழங்குகிறதா?

பல உளவியல் அறிஞர்கள் தெரிவிப்பது போல், திருமணத்திற்கு முன்னர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நடைபெறும் காதல் உறவு உண்மைத்தன்மை மீது அமைவதை விடவும் ஒரு வித போலித்தன்மை மீதே அமைகின்றது. இருவரும் பரஸ்பரம் ஒருவர் மற்றவர் முன்னே நடித்துக் கொண்டிருக்கும் நிலையே காணப்படுகிறது. ஒருவர் தனது எதிர்மறைப் பக்கங்களை வெளிப்படுத்தவும் மாட்டார். மற்றவருடைய எதிர்மறைகளைக் கண்டு கொள்ளவும் மாட்டார். ஒருவித கற்பனை உலகிலேயே இருவரும் சஞ்சரித்துக் கொண்டிருப்பர். இது புரிந்துணர்வு, நம்பிக்கை என்பவற்றுக்கு முற்றிலும் எதிரான நிலை என்பதில் சந்தேகமில்லை. அங்கு புரிந்துணர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை.

சில வெளிப்படையான விடயங்கள் அறியப்பட முடியும். ஆனால் குடும்ப வாழ்வுக்கான புரிதல், திருமணத்திற்கு முன்னரான காதலால்தான் ஏற்படுகிறது என்ற பில்டப் தவறானது. அடுத்து, இன்று காதலிப்பவர்களின் நோக்கம் எவ்வாறு இருக்கிறது? எதற்காகக் காதலிக்கிறார்கள்? ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது.

வெறுமனே களிப்பிற்கும் பொழுது போக்கிற்கும் 30 வீதமான ஆண்களும் 20 வீதமான பெண்களும் காதலிக்கிறார்கள். பாலியல் நோக்கத்திற்காக மாத்திரம் 65 வீதமான ஆண்களும் 5 வீதமான பெண்களும் காதலிக்கிறார்கள். திருமண நோக்கத்திற்காக 20 வீதமான ஆண்களும் 75 வீதமான பெண்களும் காதலிக்கிறார்கள். இங்கு முதல் இருவகையான நோக்கங்களும் மிகத் தெளிவாக இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாதவைகளாகும். அதிலும் குறிப்பாக ஆண்களைப் பொறுத்தவரையில் அதிகமானவர்கள், தனித்து பாலியல் ஆசைகளைத் தீர்த்துக் கொள்ளும் நோக்கிலேயே காதலில் ஈடுபட நினைக்கிறார்கள். (பெண்களே உஷார்!) காதலின் இந்த வடிவத்தை இஸ்லாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. திருமண நோக்கமில்லாத வெறுமனே டைம் பாஸிங்காக இருப்பினும் அதனைத் தாண்டிச் சென்று பாலியல் ஆசைகளைத் தீர்த்துக் கொள்வதாக இருப்பினும் அவை இஸ்லாத்தில் ஹராமானவை என்பதில் சந்தேகமில்லை. சிலரிடத்தில், காதல் அனுமதிக்கப்பட்டதா? என்று வினவினால் திருமணத்திற்கு முன்னர் அனுமதிக்கப்படவில்லை.  திருமணத்திற்குப் பின்னர் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பர். இந்தப் பதில் பொதுப்படையாக சரியானது என்றிருப்பினும் இக்கருத்தை இன்னும் சற்று நுணுகிப் பார்த்தல் வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில், இந்தப் பத்தியில் காதல் என்ற சொல்லின் மூலம் திருமணத்திற்கு முன்னர் ஒரு இளைஞனுக்கும் யுவதிக்குமிடையில் தோன்றும் உறவு குறித்தே பேசப்படுகிறது.

மாற்றமாக அதன் பொதுப்படையான கருத்தில் தத்துவார்த்தமாகப் பயன்படுத்தப்படவில்லை. எனவே, திருமணத்திற்கு முன்னர் இன்றைய இளைஞர் யுவதிகள் மத்தியில் பரவலாகக் காணப்படும் அந்த உறவின் உளவியல், ஷரீஅத் பக்கங்கள் குறித்தே இங்கு பேசப்படுகின்றது. அந்தவகையில் இன்று அந்த உறவு தவிர்க்கப்பட முடியாத, மனித நாட்டத்திற்கு அப்பால்பட்டு நிகழும் ஒரு செயல் என்ற கருத்தும், அதன் மூலமே திருமண வாழ்வின் புரிந்துணர்வும், நம்பிக்கையும் கட்டியெழுப்பப்பட முடியும் என்ற எண்ணமும் திருமண நோக்கமின்றி வெறுமனே களிப்புக்கும், பாலியல் தேவைக்குமாக மாத்திரம் நடைபெறும் நிலையும் தெளிவாக இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாத விடயங்களாகும். எனின், காதல் என்ற விடயத்தில் இஸ்லாம் மறுதலிக்காத பகுதிகள் என்ன? என்ற ஒரு கேள்வி தோன்ற முடியும்.

ஆம், காதல் என்ற விடயத்தில் இஸ்லாம் மறுதலிக்காத ஒரு பக்கம் இருக்கிறது. அதுதான் காதலை ஒரு உணர்வாக இஸ்லாம் மறுக்கவில்லை. அதாவது அல்லாஹ்வின் படைப்பியல்பில், ஒரு ஆண் பெண்ணை விரும்புவதும், பெண் ஆணை விரும்புவதும் இயற்கையானது. அந்தவகையில், தனக்குப் பொருத்தமான வாழ்க்கைத்துணை என்ற வகையில் குறித்த ஒரு ஆணுக்கு ஒரு பெண் மீதோ, குறித்த ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் மீதோ நியாயமாக ஒரு விருப்பம் ஏற்படுவதை இஸ்லாம் ஹராம் என்று கருதவில்லை. அசிங்கம் என்று கூறவில்லை. பொழுதுபோக்கு நோக்கமோ, பாலியல் நோக்கமோ இன்றி குடும்ப வாழ்வு என்ற நோக்கத்தின் அடிப்படையில் எழுகின்ற நியாயமான மன உணர்வை இஸ்லாம் என்றைக்கும் மதிக்கிறது. இதற்கான பல உதாரணங்களை இஸ்லாமிய வரலாற்று நெடுகிலும் நாம் காணலாம்.

ஓரிரு உதாரணங்களை மாத்திரம் கீழே தருகிறேன். நபியவர்கள் காலத்தில் இரு அடிமைகள் ஒருவரை ஒருவர் விரும்பினர். அவ்விருவரில் அடிமைப் பெண்ணுக்கு குறித்த குடும்பத்தினர் வேறு ஒரு இடத்தில் திருமணம் பேசவே, அந்தப் பெண் மறுத்து விட்டாள். தனக்கு தான் விரும்பும் அடிமையையே திருமணம் செய்து தருமாறு கேட்டாள். விடயம் நபியவர்கள் வரை வந்தது. விடயத்தை விசாரித்த நபியவர்கள் குடும்பத்தினரை அழைத்து “காதலர்களுக்கு சிறந்த தீர்வு திருமணம் தான்” என்றார்கள். (இப்னு மாஜா)

இங்கு நபியவர்கள், அவர்கள் இருவர் மத்தியில் காணப்பட்ட விருப்பத்தைத் தவறாகக் காணவில்லை. மாத்திரமன்றி அந்த விருப்பத்தை மதித்து அவர்களை சேர்த்து வைப்பதே நியாயமானது என்று குறிப்பிட்டுள்ளதையும் காணலாம்.

அலி (றழி) அவர்களிடம், குறித்த ஒரு வீட்டில் திருட முற்பட்டதாக ஒரு இளைஞனைக் கொண்டு வந்தார்கள். அலி (றழி) அவர்கள் அவனிடம் காரணம் கேட்டபோது, நான் திருட வரவில்லை. அந்த வீட்டிலுள்ள அடிமைப் பெண்ணை தான் நேசிப்பதாகவும் அவளைப் பார்க்கவே வந்ததாகவும் அழகிய கவிதை வரிகளில் கூறினான். அவனது கதையைக் கேட்டு அலி (றழி) அவர்கள் அவன் மீது இரக்கப்பட்டார்கள்.

அந்தக் குடும்பத்தாரிடம் அந்தப் பெண்ணை இவனுக்கு திருமணம் செய்து வையுங்கள். தேவை என்றால் உங்களுக்கு அவளுக்குப் பகரமாக வேறு ஒரு அடிமையைத் தருகிறோம் என்றார்கள். அப்போது அவர்கள் இவனது குடும்பத்தைப் பற்றி எங்களுக்குத் தெரியாது என்று கூறவே அவன் தன் குடும்பப் பெயரைக் கூறினான். உடனே இவள் உனக்குத்தான் எடுத்துக் கொள் என்று குடும்பத்தினர் கூறினர். இந்தச் சம்பவத்தில் அலி (றழி) அவர்கள் காதலுக்காகப் பரிந்து பேசியிருக்கிறார்கள். அத்துடன் இந்தச் சம்பவங்களில் நியாயமாக திருமண நோக்கம் இருக்கின்ற பொழுது அந்த விருப்பங்களை எவரும் தவறாக நோக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்கிறோம்.

எனவே, காதலை ஒரு உணர்வாக இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறது. அந்த உணர்வு ஹராமானதல்ல. ஆனால் காதல் என்ற விடயத்தில் இஸ்லாம் மறுக்கின்ற மிக முக்கியமான பகுதி எதுவெனின்? இன்று காதல் என்ற பெயரில் நடைபெறுகின்ற அதன் செயற்பாட்டு வடிவங்களை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக இன்று காதலர்கள் மத்தியில் காணப்படுவது போன்ற எல்லை மீறிய செயற்பாடுகளை அவை இருவரும் மாத்திரம் தனியாக ஊர் சுற்றுவதாகவோ, தொடுகைகளாகவோ, முத்தங்களாகவோ எந்த வடிவில் அமைவதையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை.

அஜ்னபியான ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் இஸ்லாம் தனித்திருத்தலைத் தடைசெய்திருக்கிறது, தொடுகையைத் தடைசெய்திருக்கிறது, பார்த்தல் பேசுதல் போன்ற செயற்பாடுகளில் மிகுந்த வரையறைகளை இட்டிருக்கிறது. காதலிப்பவர்களது புறச் செயற்பாடுகள் இன்று இவற்றில் ஏதேனும் ஒரு வடிவத்திலேயே அமைகின்றன. அந்த வகையில் உணர்வாக அனுமதிக்கப்பட்டாலும் அதன இவ்வகையான செயற்பாட்டு வடிவங்களை இஸ்லாம் சரி காணவில்லை. இவை மிகத் தெளிவாக ஹராமாக்கப்பட்டவைகளாகும்.

இறுதியாக, காதலர்களையும், காதலர்களின் பெற்றோரையும் நோக்கி சில உபதேசங்களைப் பரிமாறிக் கொள்ள நினைக்கிறேன்.

1. சகோதரர்களே, சகோதரிகளே, காதல் ஒரு உணர்வாக சுகமானதுதான். அது தவறானதும் இல்லை. ஆனால் குடும்ப வாழ்க்கை என்பது பொறுப்புமிக்கது. பாரமானது. சுகங்களின் மீது மாத்திரம் அது கட்டப்படவில்லை. உங்கள் காதல் குடும்ப வாழ்வின் பொறுப்பை உணர்ந்து கொண்டதாய் அமையட்டும்.

2. சகோதரர்களே, சகோதரிகளே, குடும்ப வாழ்வு ஒரு வணக்கம். நன்மை தரக்கூடியது. திருமணத்தின் பின் மனைவியை நோக்கிய ஒவ்வொரு செயலுக்கும் நன்மை இருக்கிறது. ஆனால் திருமணத்திற்கு முன்னர் காதல், உணர்வு என்ற எல்லையைத் தாண்டுகின்ற பொழுது ஒவ்வொரு செயலும் பாவமாக மாறிவிட வாய்ப்பிருக்கிறது. உங்கள் காதல் பாவமாக அமையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

3. சகோதரர்களே, சகோதரிகளே, ஆணிலும் பெண்ணிலும் அல்லாஹ்தஆலா எதிர்ப்பால் கவர்ச்சியை ஏற்படுத்தியிருப்பது, ஆணினதும் பெண்ணினதும் பரஸ்பர ஒத்துழைப்பின் அடிப்படையில் இவ்வுலகில் மனித இனம் நீண்டு நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காகவாகும். உங்களது காதல் அந்த நோக்கத்தை மறந்து வெறுமனே பொழுது போவதற்காகவும் அற்ப பாலியல் ஆசைகளுக்காகவும் அமைந்து விடக் கூடாது.

4. சகோதரர்களே, சகோதரிகளே, உங்கள் வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்யும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. அதேவேளை உங்களது தீர்மானம் சரியாக அமையும் வகையில் உங்களுக்கு வழிகாட்டும் உரிமை உங்கள் பெற்றோருக்கு இருக்கிறது என்பதையும் மறவாதீர்கள். அந்தவகையில் எனக்கு விருப்பம் என்பதை மட்டும் வைத்து முடிவு செய்ய நினைக்காதீர்கள். பெற்றோரின் விருப்பமும் முக்கியமானதுதான். ஏனெனில், திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் இணைவது மட்டுமல்ல அது இரண்டு குடும்பங்களின் இணைவும்தான்.

5. சகோதரர்களே, சகோதரிகளே, புறத்தோற்றம் மாத்திரம் நீங்கள் காதல் கொள்வதற்குக் காரணமாக அமைந்து விடக் கூடாது. புறத்தோற்றத்திற்கு அப்பால் குணங்கள், நடத்தைகள்தான் குடும்ப வாழ்வின் சந்தோசத்திற்கு அவசியப்படுகின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

6. சகோதரர்களே, சகோதரிகளே, ஒருவர் மீது உங்களுக்கு விருப்பம் தோன்றியது என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களையே நீங்கள் மூன்று கேள்விகளைக் கேட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

– அவர் மீது நான் ஏன் விருப்பப்பட்டேன்? (திருமண நோக்கமா? பொழுது போக்கா? பாலியல் நோக்கமா? புறத்தோற்றமா? நடத்தைகளா?)

– அவரைத் திருமணம் செய்வதால் எனக்கு என்ன பயன்? (உலக மறுமைப் பயன்கள்)

– அவரைத் திருமணம் செய்வதால் எனது குடும்பத்திற்கு என்ன பயன்? (நற்பெயர், களங்கம்)

7. சகோதரர்களே, சகோதரிகளே, ஒருவர் மீது விருப்பம் தோன்றியது, அந்த விருப்பம் மிக நியாயமானது என்பதில் நீங்கள் திருப்தியுடன் காணப்பட்டால் உங்கள் குடும்பத்தில் யாரிடம் கூறினால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமோ அவரிடம் மாத்திரம் கூறுங்கள். அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுங்கள். தயவுசெய்து பலரிடம் பேசி உங்களை நீங்களே அவமானப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாத்திரமன்றி, உங்களுக்குக் கிடைத்துள்ள நிஃமத்தைப் பார்த்து பிறர் பொறாமைப்படவும் வாய்ப்பிருக்கிறது. நபியவர்கள் கூறினார்கள் உங்கள் தேவைகளை இரகசியமாக நிறைவேற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் நிஃமத்துகளைப் பார்த்து பிறர் பொறாமைப்படுவார்கள் என்றார்கள்.

8. பெற்றோர்களே, இன்றைய சூழலில் உங்கள் பிள்ளைகள் காதல் உறவை ஏற்படுத்திக் கொள்வதற்கான எல்லா புற வாய்ப்புக்களும் இருக்கின்றன என்பதை மறவாதீர்கள். எனவே அவர்கள் மீதான உங்கள் அன்பும், அக்கறையும் மிகவும் அதிகமாக இருக்கட்டும். குடும்பத்தில் கிடைக்காத அன்பைத்தான் பிள்ளைகள் வெளியில் தேடிப் போகிறார்கள்.

9. பெற்றோர்களே, வயது வந்த உங்கள் பிள்ளைகளுடன், மனம்விட்டு உரையாடுங்கள். அவர்களது மனநிலைகள், விருப்பு வெறுப்புக்கள், பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். பெற்றோருடன் நட்பான உறவு இன்மையே இளைஞர்களின் பாதிப் பிரச்சினையாகும்.

10. பெற்றோர்களே, அவர்கள் தமது காதலைச் சொன்னால், அவசரப்பட்டுக் கோபம் கொள்ளாதீர்கள். நிதானமாக அணுகுங்கள். விடயத்தைப் புரிந்து கொள்ள முற்படுங்கள். பொறுத்தமில்லாத போது, வேண்டாம் என்ற ஒற்றை வார்த்தையில் மறுத்துரைக்காதீர்கள். அது பொறுத்தமற்றது என்பதை அவர்களாகவே உணர்ந்து கொள்ள வழி செய்யுங்கள். ஆனால் அவர்களது காதல் நியாயமானது பொறுத்தமானது என்றிருக்கும் போது, அவர்களைச் சேர்த்து வைக்கவும் தயங்காதீர்கள். அல்லாஹ்வே போதுமானவன்.