நீ..
தந்த காயங்கள்.. ஆறப்போவதுமில்லை..
இனியும்
உன்னோடு சேர்ந்து
நான்
வாழப்போவதுமில்லை... !
தற்போது..
தனிமை
தரும் நிம்மதியை..
இதுவரை..
நீ..
கொடுத்ததும் இல்லை.. !
உன்
மௌனத்தின்
கொடுமையில் இருந்து
விலக நினைத்து..
நானே..
ஊமையாகிப் போனதுதான்
மிச்சம்... !
பழிவாங்க
நீ பயன்படுத்திய..
ஊடகமா... ?
காதல்..
அல்லது
உன் நேசம்..
என்பது ஊடல் எனும்..
வெறும் காமமா... ?
எனது
உறக்கம்..
உனது கனவுகளுக்கான.. களமாகவே..
இருந்தது..
தற்சமயம் அதுவே நரகமுமானது... !
உயிரினங்களின்..
உன்னை...
பார்த்து பிரம்மித்தேன்..
இப்போது..
ஒரு
விலங்கை பார்த்து பயப்படுவதுபோல்
ஓடுகிறேன்...
வார்த்தையாலும்..
கொலை செய்ய பழகிவிட்டாய்.. ஆதலால்.. ,
தற்க்கொலையில் இருந்தும் தப்பிவிட்டேன்... !
இப்போது..
அழியாத நினைவுகளுடன்..
தனிமையின் காதலனாகவும்
மாறிவிட்டேன்.. !
தீப்பட்ட காயம் கூட..
காலப் போக்கில்
ஆறிவிடும்..
ஆனால்..
வார்த்தையால் சுட்ட காயம்..
உடல் மண்ணுடன் சேரும்
வரை
மனதினுள்..
எரிந்து கொண்டுதான் இருக்கும்..
அணைக்க முடியாத..
எரிமலையாய்... !!
No comments:
Post a Comment