Saturday, May 14, 2016

மார்க்கத்தை பாதுகாப்போம்.

இன்றைய உலகில் முஸ்லிம் சமூகத்தில் ஒரு சிலர் மார்க்கத்தை வைத்து வீண் குதர்க்கங்களிலும், பிரச்சனைகளிலும் ஈடுபடுகின்றனர். ஒரே இறைவனை ஈமான் கொண்டு இருந்த போதும் மார்க்கத்தின் சிறிய விடயங்களை தலைக்குமேல் தூக்கி பிரச்சினைகளை உண்டாக்கியும், முக்கியமான விடயங்களை மறந்தும் வாழுகின்றனர். இன்று எதை எடுத்தபோதும் அது இப்படி! இது இப்படி! என குதர்க்கங்களை செய்கிறார்களே தவிர தீர்வுகளை மேற்கொள்ளத் தயங்குகின்றார்கள். அபுல் ஹஸன் அலி அந்நபவி அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றார். (1914-2000)-இந்தியா- "இன்று முஸ்லிம்கள் நபி(ஸல்) அவர்களின் ஸீறா குறித்தும், சுன்னா குறித்தும் வீணான குதர்க்கங்களிலும் தர்க்கங்களிலும் மூழ்கிப்போய் ஸுன்னாவின் உண்மையான உயிரோட்டத்தை உணரும் நிலையை இழந்து விட்டனர். நபி(ஸல்) அவர்களை ஓர் உயிர் வாழும் முன்மாதிரியாக (DYNAMIC ROLE MODEL) எடுத்துக் கொள்வதை விட்டு விட்டு வரட்சியான விவாதங்களில் காலம் கடத்தும் ஒரு தலைமுறை இன்று உறுவாகியுள்ளது." ஆகவே வீண் குதர்க்கங்களில் நமது மார்க்கத்தை விலை பேசாமல் இஸ்லாமிய ஒளிப்பாதையின் பிரகாரம் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள முயற்சிப்போமாக.....

No comments:

Post a Comment