Saturday, May 14, 2016
சிந்தனையை தொடும் புனித அல்-குர்ஆனே
மனிதனுக்கு வழிகாட்ட வந்த உத்தம தூதருக்குஅருளப்பட்ட அற்புதங்களில் ஒன்றாகக் காணப்படும் அல்குர்ஆன் ஆனது அகில இரட்சகன் அல்லாஹ்வினால் வானவர் ஜிப்ரீல் (அலை) மூலம் வழங்கப்பட்டது. இவ்வாறு கண்ணியமிக்க இந்த அல்குர்ஆன் ஆனது பல கோணங்களில் ஆய்விற்கு உற்படுத்தப்படுவது அவசிமாகும்.
அல்குர்ஆனின் மொழியானது மிக இலகுவான மொழியில் அருளப்பட்டுள்ளது. உதாரணமாக இன்று நவீன காலத்தில் பல மொழிகளில் பல புத்தகங்கள் வந்துள்ளபோதிலும் அதை மனனம் செய்யும் வீதம் அறவே இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆனால் 1400 வருடங்களிற்கு முன்பு அருளப்பட்ட இவ்வேதம் இன்று வரை லலரது உள்ளங்களில் பாதுகாத்து வரப்பட்டுள்ளது என்றால் அது மிகையாகாது.
ஒரு மனிதன் தனது வாழ்வில் இந்த அருள் வேதத்தின் அற்புதத்தை அறிய வேண்டுமானால், கிட்டத்தட்ட அவரிடம் 3 பண்புகள் காணப்பட வேண்டும்.
1. அல்குர்ஆன் மீது நம்பிக்கையுடன் கூடிய அன்பு (மஹப்பத்) காணப்படல்.
2. அல்குர்ஆனை விளங்க வேண்டும் என்ற ஆவல்.
3. இஹ்லாஸுடன் கூடிய முயற்சி.
இவற்றில் ஒன்றில் மனிதன் நம்பிக்கையற்று விட்டால் அந்த அருள் வேதத்தின் உண்மை தன்மையை சுவைக்க முடியாது. இதனைப் பற்றி ஷஹீத் செய்யித் குதுப் தனது "பீ லிலாலில் குர்ஆன்" எனும் நூலில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
"குர்ஆனின் நிழலில் வாழ்வது என்பது அருட்கொடையாகும். அந்த அருட்கொடையை சுவைத்தவர் அன்றி வேறு எவறும் அறியமாட்டார்."
இவ்வாறு சிறந்த சிறப்பியல்புகள் காணப்படும் அல்குர்ஆனானது மனிதனது ஆய்வுகளை தூண்டும் வகையில் பல இடங்களில் கூறுகின்றது.
"அவர்கள் இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்க்க மாட்டார்களா? அல்லது (அவர்களுடைய) இதயங்கள் மீது அவற்றிற்குறிய பூட்டுகள் (போடப்பட்டு) இருக்கின்றனவா?" (சூறா முஹம்மத் 24)
இவ்வாறு அல்குர்ஆன் மனிதர்கள் மீது வினா தொடுக்கின்றது. ஏனெனில் மனிதன் இதைப் பற்றி சிந்திக்கவும், தனது வாழ்க்கையை சீறிய முறையில் திட்டமிட்டு வழிநடாத்துவதற்கும், மனித சிந்தனைக்கு இத்தூய வேதம் பணிக்கின்றது. அதன் மூலம் படைப்பினங்களின் படைப்பாளன் பற்றியும், படைப்பினங்களை படைத்ததன் நோக்கம் பற்றியும், இந்த அற்புதமிக்க வேதத்தை பற்றியும், மனிதன் கொண்டுள்ள நம்பிக்கைகளை புத்துணர்ச்சி பெறவும், சந்தேகங்களை விட்டு தூய்மையாகவும் வழிவகுக்கின்றது.
அன்று அறியாமை கால மக்களை உலகம் போற்றும் உத்தமர்களாக இவ் வேதம் மாற்றியது என்றால் இவ் வேதத்தை கண்ணியப்படுத்த வேண்டிய மிக முக்கிய தேவை இருக்கின்றது. ஆகையால் குர்ஆனை நமது வாழ்விலும் ஓர் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஓர் அற்புதமான வேதமாக நோக்க வேண்டும்.
"சிந்தித்து செயல் படுவோம்....!!!!!
என்றும் உண்மை சிந்தனை வளர வழிவிடுவோம்...!!!"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment