Sunday, December 4, 2016

தனிமை

நீ..
தந்த காயங்கள்.. ஆறப்போவதுமில்லை..
இனியும்
உன்னோடு சேர்ந்து
நான்
வாழப்போவதுமில்லை... !

தற்போது..
தனிமை
தரும் நிம்மதியை..
இதுவரை..
நீ..
கொடுத்ததும் இல்லை.. !

உன்
மௌனத்தின்
கொடுமையில் இருந்து
விலக நினைத்து..
நானே..
ஊமையாகிப் போனதுதான்
மிச்சம்... !

பழிவாங்க
நீ பயன்படுத்திய..
ஊடகமா... ?
காதல்..
அல்லது
உன் நேசம்..
என்பது ஊடல் எனும்..
வெறும் காமமா... ?

எனது
உறக்கம்..
உனது கனவுகளுக்கான.. களமாகவே..
இருந்தது..
தற்சமயம் அதுவே நரகமுமானது... !

உயிரினங்களின்..
உன்னை...
பார்த்து பிரம்மித்தேன்..
இப்போது..
ஒரு
விலங்கை பார்த்து பயப்படுவதுபோல்
ஓடுகிறேன்...

வார்த்தையாலும்..
கொலை செய்ய பழகிவிட்டாய்.. ஆதலால்.. ,
தற்க்கொலையில் இருந்தும் தப்பிவிட்டேன்... !

இப்போது..
அழியாத நினைவுகளுடன்..
தனிமையின் காதலனாகவும்
மாறிவிட்டேன்.. !

தீப்பட்ட காயம் கூட..
காலப் போக்கில்
ஆறிவிடும்..
ஆனால்..
வார்த்தையால் சுட்ட காயம்..
உடல் மண்ணுடன் சேரும்
வரை
மனதினுள்..
எரிந்து கொண்டுதான் இருக்கும்..
அணைக்க முடியாத..
எரிமலையாய்... !!

Saturday, November 12, 2016

அமுத மொழி

நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று காரியங்கள் குறித்து நான் உறுதி கூறுகின்றேன்.

*1. நீங்கள் கொடுக்கும் தர்மம் ஒரு போதும் உங்கள் செல்வத்தை குறைக்காது.*

*2. எப்போதெல்லாம் நீங்கள் ஒருவரை மன்னித்து விடுகின்றீர்களோ, அப்போதெல்லாம் உங்களது கௌரவத்தை அல்லாஹ் அதிகப்படுத்துகின்றான்.*

*3. எவர் ஒருவர் அல்லாஹ்வுக்காக பணிவாக உள்ளாரோ, அவரின் தகுதியை அல்லாஹ் உயர்த்துகின்றான்.*

நூல்: அஹ்மத் 4:231

Monday, October 24, 2016

நாங்க அப்பவே அப்படி, இப்போ கேகவா வேணும்

எனக்கு படித்து தந்த கணித ஆசிரியரை இன்று பாதையில் கண்டேன்..
அவர் என்னிடம் "சம்பத் வங்கி எங்கே இருக்கிறது?" என கேட்டதற்கு நான்
"இங்கிருந்து வட கிழக்காக ஐம்பது மீற்றர் சென்று tan 45 பாகையில் திரும்பி இருபது மீற்றர் சென்று பைதகரஸ் தேற்றத்தை பாவித்து செம்பக்கம் வழியாக செல்லுங்கள்.." என்றேன்..😂

#கொய்யால_நான்_படிக்குற காலத்துல_என்ன_பாடு_படுத்திருப்பான்..😁

😂😂😂
🔜
By:- AFN Creation™...
🌐www.smslogic.blogspot.com

Sunday, October 23, 2016

Feeling good

*ஆம்பிளை மனசு* 👨❤
தர்மஆஸ்பத்திரி மாதிரி உள்ளே என்ன நடக்குதுனு ஊருக்கே தெரியும்..........!!!

ஆனால்

*பொம்பளை மனசு* 👩❤
அப்போலோ ஆஸ்பத்திரி மாதிரி என்ன நடக்குது?எப்படி இருக்குது யாருக்குமே தெரியாது.............!!!!!
😂😂😂

Friday, October 21, 2016

கொட்டும் மழையில்....

அடை மழை வேண்டாம்
நான் நனைய
உன் மீது விழுந்து தெறித்த
சிறு துளி போதும் ....

வானவில் வேண்டாம்
உன் கன்னம் உரசி
பூசும் வெட்கத்தின்
நிறம் போதும் ....

மின்னல்கள் வேண்டாம்
உன் சிரிப்பொளி
சிதறும் வெண்ணொளி
போதும் ....

எதுவும் வேண்டாம்
நான் வாழ
உன் ஒற்றை பார்வை
என் மீது போதும் .....காதல் கிருக்கல்கள்....

Friday, October 7, 2016

உலக அமைதிக்கு உலகமறையின் உபதேசம்

*உலக அமைதிக்கு உலகமறையின் உபதேசம்*
🔴அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்யுங்கள். (04:36)
*🔴 தாய் தந்தையரை "சீ" என்று கூறாதீர்கள்*. (17:24)
🔴நம்பிக்கையோடு ஒப்படைக்கப்பட்ட பொருட்களை மோசம் செய்து விடாதீர்கள். (08:27)
🔴அளவுகளிலும், எடைகளிலும் மோசம் செய்து விடாதீர்கள். (06:152)
🔴மதுவும், சூதாட்டமும் தீமையானது, அதில் பெரும் பாவம் இருக்கிறது. (05:91)
🔴பெண்களின் சொத்தின் பங்கை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். (04:07)
🔴மனிதர்களுக்கு இடையிலான குற்றங்களை மன்னித்து விடுங்கள். அவ்வாறு மன்னிப்பதால் உங்கள் குற்றங்களை இறைவன் மன்னிப்பான். (64:14)
🔴 விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள்.அதுமானக்கேடான செயலாகும்.மேலும் வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச்செல்லக் கூடியதாகும். (17:32)
🔴குழப்பம் செய்வது கொலையை விடக் கொடியதாகும் . (02:191)
🔴வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை தேவைகளை) அளிக்கிறோம்.(17:31)
🔴இறைவன் மீது பிரியம் உள்ளவர்கள் அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிக்கிறார்கள். (76:08)
🔴நீதியை கடைபிடியுங்கள், உங்களுக்கோ, உங்கள் பெற்றோருக்கோ, நெருங்கிய உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே! (நீங்கங்கள் யாருக்காக சாட்சி சொல்கிறீர்களோ) அவர் செல்வந்தராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் சரியே! (04:135)
🔴எவன் ஒருவன் ஒரு மனிதரை அநியாயமாக கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் எல்லோரையும் கொலை செய்தவன் போல் ஆவான். (05:32)
🔴இறைநம்பிக்கையாளர்களே! (அசலுக்கு அதிகமாகவும், வட்டிக்கு வட்டியாகவும்) இரட்டிப்பாக்கப்பட்டு பன்மடங்காக்கப்பட்ட நிலையில் வட்டி வாங்கி உண்ணாதீர்கள். (03:130)
🔴அல்லாஹ்வின் இறுதி தூதர் (முகம்மது நபி) யிடத்தில் திட்டமாக உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.(33:21)

📖படியுஙகள்!!! 📨பரப்புங்கள......

Thursday, October 6, 2016

பலஸ்தீனே சிறுவன்...

ந்தியாவைச் சேர்ந்த இமாம் ஒருவர் பலஸ்தீன் சென்றபோது அங்குள்ள 10 வயது சிறுவனை அழைத்து நீ என்னுடன் இந்தியாவுக்கு வருகிறாயா என்று கேட்டார்.

அதற்கு அந்த சிறுவன், இந்தியாவில் என்ன கிடைக்கும் என்று கேட்டான்.

அங்கு நல்ல சுவையான உணவு, துணி, நிம்மதியான தூக்கம் எல்லாம் கிடைக்கும் என்று அந்த இமாம் தெரிவித்தார்.

அதற்கு அந்தச் சிறுவன், "எனக்கு அங்கு சஹீத் அந்தஸ்து கிடைக்குமா?

அல்லாஹ் இந்தப் பூமியில் அந்த அந்தஸ்த்தை எங்களுக்கு மட்டுமே கொடுத்துள்ளான். அது வேறெங்கும் கிடைக்க வாய்ப்பில்லை" என்று தெரிவித்தான்.

சிறுவனின் பதிலைக் கேட்ட இமாம் கண்கலங்கினார்.

சிறுவனின் ஈமானைப் பாருங்கள். பலஸ்தீனர்கள் அல்லாஹ்வுக்காக தன் உயிரை விடுவதற்கு எப்பொழுதும் தயராக உள்ளனர்...

படித்ததில் வலித்தது...

மௌனம்

பக்கம் பக்கமாய் பேச நினைக்கிறேன்....
ஆனால்,
உன்னுடன் பேசும் போது மட்டும் முந்தி கொள்கின்றது...
என் மௌனம் 

விளையாட்டடின் வினை

சிலருடன் நாம் நையாண்டியாய் பேசும் சில வார்த்தைகள் கூட சில தருணங்களை எம்மை விட்டு அவர்களை தூரமாக்கி வைக்கும்....

🔜
🌐www.yainnews.blogspot.com

-Comments:-
📧 AyaazAfri98@Gmail.com

#SL🇱🇰

Thursday, July 28, 2016

என் காதலியின் காதல் மடல்....

என் எதிர்கால மனைவி  எழுதிய காதல் மடல்

💝💝
அஸ்ஸலாமு அலைக்கும்
என் அன்புக் கணவா!! 😍😍
உன் வருகைக்காக காத்திருக்கிறேன்.நீ எப்படி இருப்பாய் என்று எனக்குத் தெரியாது.😕இந்த நிமிடம் என்ன செய்து கொண்டிருக்கின்றாய் என்பதும் தெரியாது.😕ஆனால்,என்னிடம் எப்படியும் வருவாய் என்று தெரியும்.😊ஏனென்றால்,இறைவன் உன்னை எனக்காகவும் என்னை உனக்காகவும் படைத்திருக்கின்றான்.💑
நான்தான் உன் அன்பு மனைவி👰.
என் கணவா!!😍நீ இப்பொழுது எந்தப் பெண்ணையாவது காதல்செய்து கொண்டு இருக்கலாம்,அல்லது காதல் தோல்வியில் கவலை அடைந்திருக்கலாம்.பல பெண்கள் உன்னை ஏளனமாக கண்ணீர் விட வைத்திருக்கலாம்😢.கவலைப்படாதே என் உயிரே 😢😍அது என் பிரார்த்தனையாக கூட இருக்கலாம்.😊😊இறைவன் உனக்காக படைக்கப்பட்டவள் நானாக இருக்கும் போது நீ எத்தனை பெண்களை உண்மையாக விரும்பிய போதும் அவர்கள் உன்னை விரும்பமாட்டார்கள்😏.என் உயிர் கணவணே !😍😍!என்னைத்
தவிர எந்தப்பெண்ணும் உன்னை நேசிக்கமாட்டாள்😕.நான் உனக்காக பிறந்தவள்😚.கவலைப்படாதே!😔 என்னிடம் நீ வரும் பொழுது உன்னை அன்பால் அரவணைப்பேன்😍😍.உன் கண்ணீரில் கரைந்த காதலை மறக்கச் செய்வேன்.😍😍
அன்று நீ புரிந்து கொள்வாய் உன் அன்புக் காதலி நான் என்பதை.😊😊
என் அன்புக் கணவா!😍😍
உன் அழகு வேண்டாம்!!👋
உன் பணமும் வேண்டாம்👋
இறைவணுக்கு அஞ்ஞசக் கூடிய நல்ல ஆணாக இருந்தால்போதும்.👍👈
என் உயிர் கணவா!!😍😍
கவலைப்படாதே! 😞
உன் பழைய வாழ்க்கையை மறந்து விடும் அளவு உன்னில் என் அன்பு நிறைவாக இருக்கும்.😍😍உன் எதிர்காலத்தை அழகாக்கும் உன் இன்னொரு உயிர் நான்.😍😍
என் கணவா!😍😍
உன் அருகில் இப்பொழுது நான் இல்லை.😕ஆனால் என்னை நீ சரணடையும் பொழுது உன்னில் இருந்து நான் என்றும் நீங்க மாட்டேன்.👫
மரணம் என்ற ஒன்றைத் தவிர.😢
என் கணவா !😍😍
எங்கிருக்கிறாய்!?😕
உனக்காகவே என்னைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்.😊😊😍
உன் வருகைக்காகவே காத்திருக்கிறேன்.👰
நீயும் நானும் சந்திக்கும்
அந்த அழகிய திருமண நாளை இறைவன் விதியில் எப்பொழுது எழுதிருக்கிறான்?😕
காத்திருக்கிறேன். கணவா!!😍😍
கலங்காமல் நீயும் காத்திரு!😍😍👈👈💖💕 உன் எதிர்கால உன் உயிர் மனைவி😍😚💑💖👈💝....

Monday, July 11, 2016

என்னவளின் காதல்........

என் காதலியின் திருமணம் எதிரே நடந்து
கொண்டிருக்கிறது😞😒

எவனோ ஒருவன் போல் நான்
அமர்ந்து கொண்டிருக்கிறேன்😞
தாடி வளர்க்கும் வயதும் இல்லை😣

போடி என்று
சொல்ல மனமும் இல்லை😘🙁

என்னோடு நின்று புகைப்படம் எடுக்க மறுத்தவள்
அவரோடு
நின்று
நிழற்படம் எடுத்து கொள்கிறாள்😓😔

கண்ணத்தில் முத்தமிட மறுத்தவள்
அவர் ஏதோ
காதருகில் சொல்ல இவளும் கூர்ந்து கேட்டு
கொண்டிருக்கிறாள்😥😖

அழகான கூரை புடவை கட்டி மூன்றாம் பிறைநிலா போல்
இருக்கும் நெற்றியில்
நெற்றிச்சுட்டி😘😒

நான் பிடித்து முத்தம் கொடுத்த கைகளில்
மருதாணி போட்டிருக்கிறாள்😞😘

அதன் வாசம் இங்கு
வரை வீசுகிறது😏

அவள் கழுத்தில் ஏறவே வரம் வாங்கி வந்த மாலை
அணிந்திருக்கிறாள்😐😑

அடிக்கடி என்னையும்
பார்க்கிறாள் யாரோ ஒருவரைப் போல😪
யாருக்கும் தெரியாமல் இருட்டிலே என்னோடு கை
கோர்த்து நடந்தவள்
இன்று ஆயிரம் பேர் முன்பு அக்னியை
சாட்சி வைத்து சுற்றி வருகிறாள்😰😞

ஏமாந்தவன் எதிரிலே இருக்க
இன்னொருவனுடன் உனக்கு திருமணம்😏😣

இதற்கு நான் சாட்சியா என்று அக்னி
கொழுந்துவிட்டு எரிகிறது😖

அருகிலே அவள் சகோதரி இருக்கிறாள்
மணப்பெண்ணை போலவே அவளும் உடை அணிந்து
நிற்கிறாள்😒😣

என் காதலை பிரித்ததில் பெரிதும்
பங்கு இருக்கிறது அவளுக்கு😣

மன்னிக்கவும் அவருக்கு😴
தாய் தந்தையும் இருக்கிறார்கள் நாம் பெற்ற
பெண் எந்த தவறையும் செய்யவில்லை என்ற
மன நிறைவோடு😞😣
அவள் கழுத்திலே தாலி கட்டப்போகும் கணவன்
இருக்கிறான் பாசத்தோடு😘😖
உண்மைகள் அனைத்தும் தெரிந்தும் நான்
ஊமையாக இருக்கிறேன்😷😓
அவள் என்னோடு பழகியதை நினைத்து பார்க்கிறேன்
வெகுண்டெழுந்து வருகிறது அழுகை😪😢
அதை கை
குட்டையும் கண்ணாடி வைத்தும் மறைக்கின்றேன் 😞😖
வெள்ளி தட்டில் அட்சதை வருகிறது நானும் அதை
எடுத்துக்கொண்டேன் 😘😣
மந்திரங்கள் ஓத மேலங்கள் ஒலிக்க அவள் தலை
குனிகிறாள் அவர் தாலியை கட்டி விட்டார் 😪😓
நானும்
அட்சதை தூவினேன் எங்கிருந்தாலும் வாழ்க என்ற
எண்ணத்தோடு😪🙏
அவள் என்னை பார்க்கிறாள்
இவனை பெரிதாய் ஏமாற்றி விட்டோம் என்ற
எண்ணத்தில் 😣😓😞
அவள் ஏற்றிய காதல் நாடகத்தில் அழகாய்
நடித்து முடித்து மணமேடை ஏறி விட்டாள்😓😢😣
நடிக்க
தெரியாத நான் வேடிக்கை பார்த்து
கொண்டிருக்கின்றேன்😞😣😖
எல்லாம் முடிந்து விட்டது என்று அவள்
எண்ணலாம் 😞😠
ஆனால் இதுதான் ஆரம்பம் என்று
அவளுக்கு தெரியாது 😃😠
அவள் கண்களில் இருந்து கண்ணீர் சிந்த கூடாது
என்பதற்காகவே அவளை விட்டு விட்டேன் 😣😓
என் மனதில் நிலவை நின்று தொடும் அளவிற்கு
கட்டிய காதல் கோபுரம்😭😥
சித்தெரும்பை விட
சிறியதாக சிதறி போனது 😢😣😕😒
#வாழ்கையின் சோகம் என் முகவரி#😢😖😪 இவன்...

Monday, July 4, 2016

மஸ்ஜிதுன் நபவிக்கு அருகில் ஏற்பட்ட தற்கொலை தாக்குதல்...

புனிதமிக்க மதினா நகரில் சற்றுமுன்னர் தீவிரவாத தற்கொலை தாக்குதல்!!!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாசல் ஆன மஸ்ஜீதுன் நபவிக்கு அருகில் தற்கொலை குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது...

இக் குண்டு தாக்குதலில் 4 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உயிர்ழந்து இருப்பதாகவும் 5பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் சவுதி அரபியா தகவல் வெளியிட்டுள்ளது...

மேலும் இத்தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் உரிமை கொள்ளவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

Sunday, June 19, 2016

ஆயத்துல் குர்ஸியின் சிறப்புக்கள்

ஆயத்துல் குர்ஸியின் சிறப்பு...

அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:

நபி(ஸல்) அவர்கள் ரமளானுடைய (ஃபித்ரா) ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள். அப்போது ஒருவர் வந்து உணவுப் பொருட்களை அள்ளலானார். அவரை நான் பிடித்து, 'உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்!' என்று கூறினேன். அதற்கவர், 'நான் ஓர் ஏழை!' எனக்குக் குடும்பம் இருக்கிறது. கடும் தேவையும் இருக்கிறது! என்று கூறினார். அவரை நான்விட்டு விட்டேன். விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள், 'அபூ ஹுரைராவே! நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவர் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! தாம் கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தமக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவர் முறையிட்டார். எனவே, இரக்கப்பட்டு அவரைவிட்டு விட்டேன்! என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான்! மீண்டும் அவன் வருவான்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நம்பி அவனுக்காக (அவனைப் பிடிப்பதற்காக) காத்திருந்தேன். அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கியபோது அவனைப் பிடித்தேன். 'உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்! என்று கூறினேன். அதற்கவன், 'என்னைவிட்டுவிடு! நான் ஓர் ஏழை! எனக்குக் குடும்பமிருக்கிறது! இனிநான் வரமாட்டேன்! என்றான். அவன் மேல் இரக்கப்பட்டு அவனைவிட்டு விட்டேன். விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள் அபூ ஹுரைராவே! உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்! என்று கேட்டார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே! அவன் (தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான்; எனவே, அவன் மேல் இரக்கப்பட்டு அவனைவிட்டுவிட்டேன்! என்றேன். 'நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான். திரும்பவும் உம்மிடம் வருவான்! என்றார்கள். மூன்றாம் முறை அவனுக்காகக் காத்திருந்தபோது, அவன் வந்து உணவு பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து, 'உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்! (ஒவ்வொரு முறையும்) 'இனிமேல் வரமாட்டேன்! என்று செல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய்! என்று கூறினேன். அதற்கவன் 'என்னைவிட்டுவிடு! அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்!' என்றான். அதற்கு நான் 'அந்த வார்த்தைகள் என்ன? என்று கேட்டேன். 'நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஓதும்! அவ்வாறு செய்தால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்!' என்றான். விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள் 'நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனைவிட்டு விட்டேன்!' என்றேன். 'அந்த வார்த்தைகள் என்ன? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதும்! அவ்வாறு ஓதினால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்! என்று என்னிடம் அவன் கூறினான்' எனத் தெரிவித்தேன். நபித்தோழர்கள் நன்மையான(தைக் கற்றுக் கொண்டு செயல் படுத்துவதில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் 'அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும் அவன் உம்மிடம் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறான்! மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா? என்று கேட்டனர். 'தெரியாது" என்றேன். 'அவன்தான் ஷைத்தான்!' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

Saturday, June 18, 2016

LOVE POEMS (part-02)

Ninaippathu
Pol
Valkkai
Ellarukkum
Amaivathu
Illai...

Alakaha
Vala
Thodankiya
Valkaiyai
Silarukku
Vala
Therivathum
illai...

______________________________________

Unnai
Theadi
Naan
Varalam
Ennai
Theadi
Nee
Varalaam...

But

Iruvaraiyum
Theadi
Pirivu
Varakkoodaathu!!!

______________________________________

"Soagangal kanneeril mattum marainthirukkathu.. waai wittu sirikkum silarin poi sirippugalilum marainthirukum...

-----
Â
-----"
______________________________________

neruppil erinthalum,
thangathin
niram marathu..
athu pola nee arugil irunthalum tholaivil irunthalum enrum en kathal marathu

::UnNinaivu::
______________________________________

Yanakkagave peranthaval nee,
unnai nesippatharkagavea padaikkapattavan naan,
en ethirparppu nee alla,
unn anbu mattum than........

=>

அல்-குர்ஆனின் சிறப்புக்கள்

குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்
===========================
1) நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ”பரிந்துரை” செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

2) குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு சூராக்கள் அல்பகரா, ஆலு இம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

3) உங்களில் சிறந்தவர், குர்ஆனைக் கற்று அதை பிறருக்கு கற்றுக் கொடுத்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

4) குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன் படி செயல்பட்டவர் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

5) அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து (குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ, அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால், அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூற மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

6) ”எவருடைய உள்ளத்தில், குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ, அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப்போல்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

விளக்கம்: படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான், குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளினான். ஆனால், முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். உங்களை மரணம் வந்தடைவதற்கு முன், தெரிந்தவர்களிடம் சென்று, குர்ஆனை கற்றுக் கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதர சகோதரிகள், குர்ஆனை சரளமாக ஓதவும், அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று கூறிக்கொண்டு, நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி, எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். முஸ்லிம்களே! தயவு செய்து குர்ஆனைப் படியுங்கள், அதைப்படிப்பது மிகவும் அவசியமானது. அதைப்படிப்பது மிகவும் இலகுவானது. அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.

திட்டமாக, நாம் குர்ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம். ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா? (அல்குர்ஆன் 54:22)

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)
நாம் இந்தக் குர்ஆனைப் படித்து, விளங்கி, அதன்படி செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். அப்படிச் செயல்படாதவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? என்று கேட்கின்றான். அப்படி அவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்படவில்லையே! ஏன் அதைப்படித்து செயல்படாமல் இருக்கின்றார்கள்? என அல்லாஹ் நமது சிந்தனையைத் தூண்டும் கேள்வியை கேட்கின்றான். ஆகவே, அன்புள்ள சகோதர சகோதரிகளே! குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள். அதன் கருத்துக்களை தர்ஜமதுல் குர்ஆனின் மூலம் விளங்கிப்படியுங்கள். அதன் படி செயல்படுங்கள். விஷேசமாக குர்ஆன் இறங்கிய இந்த ரமளான் மாதத்தில் அதிகமாக ஓதுங்கள். ஒரு எழுத்தை ஓதினால் குறைந்தது பத்து நன்மை கிடைக்கின்றது. ஒரு நாளில் எத்தனையோ எழுத்துக்களை படிக்க நமக்கு வாய்ப்பிருக்கின்றது. சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். குர்ஆனைப் படித்து, அதன்படி நடந்து, ஈருலக வெற்றி பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..!

ýãîÑ